மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். வவுனியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிரடி தீர்ப்பு
சம்பவம் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில், சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தந்தை மதுபோதையில் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
வழக்கின் விசாரணைகளின் அடிப்படையில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, குற்றம் அவரது சொந்த தந்தையினால் மேற்கொள்ளப்பட்டமை, சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் அவசியம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.
அபராதத் தொகை
இதன்படி, குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் நலனைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் இவ்வாறான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening