கைக்குண்டு சம்பவம் அரசியல் சூழ்ச்சி
கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சதித்திட்டம் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான சிரந்த அமரசிங்க(Chirantha Amarasinghe )இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சிரந்த அமரசிங்க,
“ இதன் பின்னணியில் மிகப் பெரிய நாடகம் இருப்பது தெரிகிறது. இந்த நாடகம் பெல்லன்வில கைக்குண்டு சம்பவத்திற்கும் தேவாலய கைக்குண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாட்டில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் பொருட்கள் தயாராக இருக்கின்றது என்று ஒருவர் (கலகொட அத்தே ஞானசார தேரர்) தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வந்து கூறியதுடன் இந்த சூழ்ச்சி ஆரம்பமானது.
இதற்கு மறுநாளே நாராஹென்பிட்டி வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்படுகிறது. இதன் பின்னர் சரியாக ஒரு மாதத்தில் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி பெல்லன்விலவில் கைக்குண்டு மீட்கப்படுகிறது.
பொரள்ளை கைக்குண்டு சம்பவம் தொடர்பாக முதலில் சன் கிறிஸ்டியன் கைது செய்யப்பட்டார். மருத்துவர் இதனை செய்திருந்தால், ஏன் சன் கிறிஸ்டியனை தடுத்து வைத்திருக்க வேண்டும்?. முனி இன்னும் சிறையில்.
சரத் வீரசேகர என்ன செய்ய முயற்சிக்கின்றார்.
நாட்டில் கத்தோலிக்க மற்றும் பௌத்த மக்கள் இடையில் பிளவுகளை ஏற்படுத்த சூழ்ச்சிகரமாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி , அதனை அரசியலுக்கு பயன்படுத்தி, வாக்குகளை உறுதிப்படுத்தும் அரசியல் விளையாட்டு நடக்கின்றது” எனவும் சிரந்த அமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam