“அரசாங்கத்தின் இனவாத திரைக்கதைகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன”
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கருத்தடை மருத்துவர் என்ற கதையை கையில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் உண்மை நிலைமை தற்போது வெளியில் வந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa )தெரிவித்துள்ளார்.
முல்கிரியாக நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொய், மோசடி, ஏமாற்று மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாதம், மதவாதத்தை சமூகத்திற்கு பரப்பி, முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
மருத்துவர் ஷாபியை இலக்கு வைத்து ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய பிரசாரத்தின் உண்மை என்ன என்பது தற்போது வெளியாகி வருகிறது. மருத்துவர் ஷாபிக்கு செலுத்த வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் கீழ் நடக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு மேலதிகமாக கருத்தடை கொத்து ரொட்டி பற்றியும் பேசினார்கள் நினைவில் இருக்கின்றதா. மக்கள் இந்த பொய்களை நம்பி ஏமாற்றமடைந்தது போதும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
