நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை! ஒப்புக்கொள்ளும் அரசாங்கம்
நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் அரையாண்டு காலப் பகுதியில் நாட்டின் மொத்த இறக்குமதியில் 18 வீதம் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் அரையாண்டு காலப் பகுதியில் இந்த தொகை 25 வீதமாக உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டு மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்தினால் அந்நிய செலாவணியைக் கொண்டு அத்தியவாசிய பொருட்களான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.