வைபவத்திற்காக ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட அரசாங்கம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்திற்காக ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணத்தை அரசாங்கம் விரயமாக்கியுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன கொரகான தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவுக்கப்பட்டுள்ள 440 மீற்றர் பரப்பளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்பணிகளுக்கு வைபவம் ஒன்றை நடத்தியது முற்றிலும் தேவையற்ற நடவடிக்கை.
இதற்காக அரசாங்கம் மக்களின் பணத்தை அதிகளவில் விரயமாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது வீட்டுக்கு அறை ஒன்றை நிர்மாணித்து அதனை திறக்க பெரிய வைபவத்தை நடத்தி, இரண்டாவது அறையை திறக்க பெரும் தொகையை செலவிட்டு வைபவத்தை நடத்தியது போன்றது எனவும் கொரகான குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam