நாடு தொடர்ந்தும் கடன் சுமைக்குள் தான் இருக்கும்! ஜே.வி.பி. குற்றச்சாட்டு
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தி விட்டு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுள்ளதைப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுகின்றார்கள் என ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.03.2023) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் தெரிவிக்கையில், "சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பைத் தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
அவ்வாறாயின் நாடு தொடர்ந்தும் கடன் சுமைக்குள் தான் இருக்கும். உற்பத்தித் துறை மற்றும் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.
தற்காலிக தீர்வு மாத்திரம் தற்போது கிடைக்கப்
பெற்றுள்ளது. இதனால் சமூகக் கட்டமைப்பில் நிலையான மாற்றம் ஏதும் ஏற்படாது.
கடன் பெற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
