அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடியுள்ள அரசாங்கம்
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக உயர் ஓட்டம் ஒக்ஸிஜன் சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது.
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நன்மைக்காக பயன்படுத்த அத்தகைய அலகுகளை பெற்றுக்கொள்வதற்கான நிதிகளை திரட்டுமாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன.
அரச சார்பற்ற நிறுவன செயலகத்தின் பணிப்பாளர் ராஜா குணரத்ன, இது தொடர்பில் நாட்டில் செயற்படும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அதில் அரச மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற இயந்திரங்கள் அவசரமாக தேவைப்படுவது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச
தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் பாரிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை அரச சார்பற்ற
செயலக பணிப்பாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.