அரசாங்கத்திடம் எவ்வித நோக்கங்களும் இல்லை
நாட்டின் தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும் இல்லாத கட்டுப்பாடுகள் அற்ற, அன்றாடம் வாழ்க்கையை நடத்திச் செல்லும் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச(Rohana Lakshman Piyadasa) தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திய எமது கட்சியின் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரசாங்கத்தின் தலைவர்கள் அச்சுறுத்துகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எமது கட்சியின் தலைவர் ஆற்றிய உரையின் பின்னர் அவர்களிடம் பதில்கள் இல்லை எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் கூட்டப்படவுள்ளது.
அரசாங்கம் தொடர்ந்தும் கட்சியின் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
