வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை கையாளும் திறனை அரசாங்கம் இழந்து விட்டது!
கொவிட் 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை கையாளும் திறனை அரசாங்கம் இழந்து விட்டது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. சமூகப் பரவலை இன்னும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் பெயர் கூறி கொத்தணிகள் உருவாகின, இன்று பெயர் கூற முடியுமான கொத்தணிகள் இல்லை, ஏனெனில் நாட்டின் சகல இடங்களிலும் தொற்றாளரகள் இனம் காணப்ட்டவண்ணமுள்ளனர். மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மக்கள் குறித்து எந்த உணர்வுமற்றவர்கள் போன்று இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
இந்தியா வழங்கிய தடுப்பூசிகள் மூன்று இலட்சம் மக்களுக்கு தான் போதுமானது. மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்பதான எந்த விடயமும் இடம் பெறுவதாக தெரியவில்லை. பலருக்கு தொழில் இல்லை. அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணமுள்ளது. அரசாங்கம் பல வர்த்தமானிகள் மூலம் நிர்ணயித்த விலைகளுக்கு சந்தையில் பொருட்கள் இல்லை. அரசாங்கம் நிர்ணயித்த விலையையே கட்டுப்படுத்த முடியாதவர்களாக இந்த அரசாங்கம் இருக்கிறது.
தேங்காயின் விலை 120 யும் தாண்டியுள்ளது. அரிசி விலையும் அவ்வாறு தான் 90 ரூபாய்க்கு சந்தையில் அரிசி இல்லை. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர்.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் தமக்கு வழங்கப்படவுள்ளதாக அதானி நிறுவனத்திற்குரிய அதானி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரத்திற்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய துறைமுக ஊழியர் சங்கம், பிக்குகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அலரி மாளிகைக்கும், ஜனாதிபதி செயலகங்களுக்கும் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் நிலை சென்று இன்று ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக காலடிக்குச் சென்று இந்த எதிர்ப்புகளைக் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2015 முன்னர் ஆட்சியில் இருந்த ராஜபக்ஷர்கள் தான் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்க இடமளித்தனர். சீனாவிற்கு பல இடங்களைக் கொடுத்தனர். வேலையாட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தனர். அன்று இலங்கையை பலரும் சீனா கொலனி என்று உன்மையைத் தான் கூறினார்கள்.
கொழும்புத் துறைமுகத்தின் சிஐசி முனையத்தின் மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பங்குகளை சீனாவிற்கு வழங்கி இருந்தனர். 15% பங்கு தான் இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்தது. அதன் திறப்பு விழாவின் போது இலங்கை கொடியைக் கூட போட இடமளிக்காத நிலையை நாம் மறந்திருக்க மாட்டோம்.
சீனா சார்பு நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் பிரதிபலன் தான் இன்று இந்தியா பிராந்திய ஆபத்தை கருத்திற் கொண்டு கிழக்கு முனைய விடயத்தில் நடந்து கொள்ளுவதாக சுட்டிக்காட்டினார். வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் புறக்கோட்டையிலிருந்து கடுவல வரை குறைந்த வட்டி வீதத்தில் நிர்மானிக்க ஜப்பான் ஜய்க்கா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ஒரு தலைபட்சமாக இரத்து செய்துள்ளனர்.
அவ்வாறாயின் இந்தியாவுடனான கிழக்கு முனைய விவகாரத்தை ஏன் இரத்து செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவிற்கு இந்த வழியை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் தான் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் வரை ஆட்சியிலிருந்த ராஜபக்ஷ அரசாங்கமாகும்.
அதானி நிறுவனத்திற்கு எதிராக பல கோடி இந்தியர்கள் இந்தியாவில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானிக்கு எதிராக விவசாயிகளிடமிருந்து வியாபார கொள்ளை அடிப்பதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரோடு இருக்கும் பிரதான சந்தேக நபர் சாரா மாத்திரம் தான் இவரை இந்தியாவில் இருந்து இங்கு உத்தியோகபூர்வமாக அழைத்துவர ஏன் கேட்காமல் இருக்கிறார்கள். இவர் இந்தியாவிற்குச் செல்ல மன்னார் வரை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பரில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சாராவை வைத்துக் கொண்டு இந்தியா இலங்கைக்கு ஆதிக்கம் செலுத்துகின்றதா என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசாங்கம் இன்னும் உத்தியோகபூர்வமாக அழைத்து வர இந்தியாவிடம் கேட்கவில்லை. இந்திய வெளிவிவகார ஆலோசகர்,செயலாளர் என்று பலர் வந்து போனார்கள் ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசவே இல்லை.
ஆபத்தான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்.தேர்தலின் போது யாருக்கும் எந்த நாட்டிற்கும் மன்டியிட மாட்டோம் என்று கூறியவர்கள் இன்று இந்தியாவிடம் மன்டியிட்ட வன்னமுள்ளனர். அதிகரத்தை தக்க வைக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். மஞ்சளைக் கண்டதும் எரிக்கின்றனர். அதே வேலை சீனியில் இல்லை. தேசிய உற்பத்தியும் இல்லை மஞ்சளும் இல்லை. மஞ்சளை கண்டதும் அரசாங்கத்திற்கு அதிக கோபம் வருகிறது என்று தெரிவித்தார்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
