அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – கபீர் ஹாசீம்
அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிமொழி வழங்கிய போதிலும் இதுவரையில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த அரசாங்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியுள்ளது என்பது புலனாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
