நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத அரசாங்கம் - எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
கிராமங்களில் உள்ள மரண நிதியுதவி சங்கங்கள் கூட ஒரு பாதிப்பின் போது தற்போதைய அரசாங்கத்தை விட பொறுப்புடன் செயற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்து்ளளார்.
அரசாங்கம் தற்போதவாது அரசியல் தலைக்கணத்தில் இருந்து விடுப்பட்டு சுகாதார ஆலோசனைகள் மற்றும் அனுபவமுள்ள அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி குறித்து காணொளி தொழிநுட்பம் மூலம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ருவான் விஜேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொடர்பான சிறந்த நிபுணர்கள் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. எனினும் அரசாங்கம் இந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.
நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளி விட்டு, கோவிட் தொற்று நோயிலும் அரசியல் செய்ய முயற்சிப்பதன் காரணமாவே அரசாங்கத்தினால் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தொற்று நோய் நிலைமை என்பது அரசியல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் நிலைமையல்ல. தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அந்த துறை சம்பந்தமான நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனைகளை பெற வேண்டும் என்பது சிறுவர்களுக்கு கூட புரியும் விடயம்.
அரசாங்கம் தற்போது நாயின் வேலையை கழுதை செய்வது போல், கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் அரசியலை சம்பந்தப்படுத்திக்கொண்டுள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.