உலக சந்தையில் அதிகரிக்கும் விலையை அரசால் கட்டுப்படுத்த முடியாது - அமைச்சர் கம்மன்பில
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அல்ல பத்தில் ஒன்பது பலம் இருந்தாலும் உலக சந்தையில் அதிகரிக்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் பலத்திற்கு அமைய உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதில்லை.
உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் ஏற்படும் நஷ்டத்தை தொடர்ந்தும் அரசாங்கத்தினால் சுமக்க முடியாது.
எரிபொருளுக்கான அரசாங்கம் மானியம் வழங்கினால், இந்த மாதம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
இப்படியான நிலைமையில் விலையை அதிகரிக்காமல் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 30 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
