ஒரே நாடு ஒரே சட்டம்: ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஞானசார தேரர்
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயார் என ஆணைக்குழுவின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையை ஒப்படைப்பதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு அது குறித்து அநேகமாக அறிவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறுதி அறிக்கை
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி தற்போதைக்கு கருத்து எதுவும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவும் பிரதமர் நம்பிக்கை |