சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தைக்கு விளக்கமறியல்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தையை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பைசல் நகர்ப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாய் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ள நிலையில், சிறுமி தாயின் தங்கையின் வீட்டில் வசித்து வந்த போது சிறுமியின் தந்தை மதுபோதையில் வருகை தந்து சிறுமியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
