மகிந்த - ரணில் சந்திப்பு.. கொழும்புக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எருமைத் தயிர்ச் சட்டிகள்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பல எருமைத் தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் வழங்கியுள்ளார்.
சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் தங்காலையில் அமைந்துள்ள மகிந்தவின் கால்டன் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் சிறிது நேரம் உரையாடிய பின்னர், மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை மதிய உணவு உண்ணுமாறு அழைத்துள்ளார்.
இந்த மதிய உணவு கிராமிய முறைப்படி தயாரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மதிய உணவு வேளையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
'கிராமத்தின் நல்ல எருமைத் தயிர்'
குறிப்பாக, நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்யும் போராட்டத் தொடர் குறித்தும், அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு அவசியம் என்றும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது குறித்து நாமல் ராஜபக்ச மற்றும் சாகர காரியவசம் ஆகியோருக்கு அறிவித்து, தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மதிய உணவுக்குப் பிறகு எருமைத் தயிர் மற்றும் பானி ஆகியவை பரிமாறப்பட்டன. அதன் பின்னரே, மகிந்த ராஜபக்ச , "இதோ கிராமத்தின் நல்ல எருமைத் தயிர்" என்று கூறி, பல தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் கொழும்புக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri