நீர் தாங்கி கவிழ்ந்து வீழ்ந்ததில் 3 வயது சிறுமி பலி
பொலன்னறுவை- அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 03 வயதும் 07 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கீழே இருந்த தண்ணீர் குழாயில் நீராடி கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
