இஸ்ரேலை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானின் ட்ரோன்கள்! ஈசல் போல வானில் திகில் காட்சிகள் (video)
கடந்த இரண்டு வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த தாக்குதலை சற்று முன்னர் ஆரம்பித்தது ஈரான்.
ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி சிரியாவில் வைத்து இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீதான ஈரானின் பதில் தாக்குதல் இம்முறை நிச்சயம் இடம்பெற்றேயாகும் என்று உறுதியாக அறிவித்திருந்தது ஈரான்.
கடந்த சில நாட்களாகவே அத்தனை நாடுகளினாலும் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தாக்குதல், சில மணி நேரங்களுக்குள் ஆரம்பித்துள்ளது.
நூறுக்கும் அதிகமான ட்ரோன்கள் இஸ்ரேல் மீது சாரை சாரையாகவந்து தாக்கிக்கொண்டிருக்கின்றன.
பலிஸ்டிக் மிசைல்ஸ், குரூஸ் மிசைல்ஸ் போன்வும் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேலின் ஊடகங்கள் கூறுகின்றன.
- அடுத்து என்ன நடைபெறப்போகின்றது?
- இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்ளுமா?
- இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் முழு அளவிலான வளைகுடா யுத்தமாக மாறுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
- அமெரிக்கா இந்த யுத்தத்தில் நேரடியாக ஈடுபடுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |