இளைஞர்கள் விரக்தியடைவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல - ருவான் விஜேவர்தன
நாட்டை செல்வ செழிப்பாக மாற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டுக்கு பயங்கரமான நகைச்சுவையை வழங்கும் நிலைமைக்கு சென்றுள்ளதால், மக்களுக்கு அரசியல் முறை கசந்து போயுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் விஜேவர்தன இதனை கூறியுள்ளார்.
இளம் தலைமுறையினர் தமது எதிர்காலம் குறித்து விரக்தியடைவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நாட்டுக்கு பலன் தரக்கூடிய பெருமளவிலான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு செல்ல தீர்மானித்திருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
இளைஞர் சமூகத்தின் கனவுகளை அழிக்காத நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளதென்றால், அந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.