சுதந்திரக்கட்சி எங்களிடம்-டாலி வீதியில் இருப்பது வெறும் பெயர் பலகை-மகிந்த அமரவீர
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது அணியின் கைகளிலேயே இருப்பதாகவும் கட்சி பெயர் பலகையிலேயோ, டாலி வீதி கட்டடத்திலேயோ கட்சி இல்லை எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் 60வது ஆண்டு சமய நிகழ்வு கதிர்காமத்தில்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி டிசம்பர் 31 ஆம் திகதி 60வது முறையாக கதிர்காமம் கிரிவெஹெர விகாரைக்கு அருகில் நடத்தும் சமய நிகழ்வு தொடர்பில் விளக்குவதற்காக கமத்தொழில் அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டுள்ளார்.
இதன் போது செய்தியாளர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சமய நிகழ்வுகளை ஒரு தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாக கட்சியின் தற்போதைய செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருப்பது குறித்து வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர், அந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை சிறந்த விடயம் என கூறியுள்ளார்.



