யாழில் பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்
யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்துள்ளது.
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், இரட்டைக் குழந்தைகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதன்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



