பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட சாரதி அனுமதிப்பத்திரம்
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி அதனை அத்தியாவசியமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக புதிய சாரதி அனுமதிபத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விசேட சாரதி அனுமதிப்பத்திரம்
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள், பாடசாலை மாணவர்களுக்கான வான் சாரதிகள், அலுவலகப் போக்குவரத்து வான் மற்றும் பேருந்து சாரதிகள் ஆகியோர் குறித்த விசேட சாரதி அனுமதிப்பத்திரத்தை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான வழிகாட்டல்களுடன் கூடிய வாகன ஓட்டும் பயிற்சிநெறியொன்றை இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊடாக அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் லொறி சாரதிகளுக்கான உதவியாளர்கள் நடைமுறையும் கட்டாயமாக்கப்படவுள்ளது.



