கதிர்காமத்திற்கான காட்டுவழி பாதையாத்திரை இன்று திறந்துவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது
இன்று(10.07.2026) காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்
காட்டுப்பாதை மீண்டும் மூடப்படவுள்ளது
அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வருகின்ற 24ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு காட்டுப்பாதை மூடப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் விழா
சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான பக்கர்கள் கதிர்காமம் நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்






பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam