ரணிலின் தொடர் வெளிநாட்டு பயணங்கள்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து , அவர் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் செப்டம்பர் 26 ஆம் திகதியன்று டோக்கியோவுக்கு புறப்படவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்
இதற்கமைவாக செப்டம்பர் 27 ஆம் திகதி ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேவின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு செல்லவுள்ளார்.
அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்ளவுள்ளார்.
கடன் வழங்குநர்களின் மாநாடு
இந்தநிலையில் இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கான மாநாட்டை தாம் ஏற்பாடு செய்வதாக முன்னதாக ஜப்பானிய நிதியமைச்சர் அறிவித்திருந்த போதும், தற்போது அந்த அறிவிப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை அதிகாரி ஒருவர், இந்த மாநாட்டை இலங்கையே ஏற்பாடு செய்யும்
என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
