சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை: தொடரும் குற்றச்சாட்டு

Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Erimalai Jul 17, 2024 03:23 PM GMT
Report

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத கடற்றொழிலாளர்களை  கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் சைவநெறிக்கூடம் சந்திப்பு

இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் சைவநெறிக்கூடம் சந்திப்பு

சட்டவிரோத கடற்றொழிலாளர்கள்

ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் (15) சட்டவிரோத கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது செய்ய தவறியதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.

இறுதியாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் கடற்படை தளபதிக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கடற்றொழிலாளர்களை முறைப்பாடு செய்ய வேண்டாமெனவும், கடற்படைக்கு அழைப்பெடுக்க வேண்டாமெனவும் கூறிய அதிகாரி தாம் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்வதாக கூறினார்.

எனினும், தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து படகுகள் சட்டவிரோத தொழிலுக்கு செல்வதாகவும் அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு மீன்களுடன் வருவதாகவும் தங்கரூபன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை: தொடரும் குற்றச்சாட்டு | The Fishermen Have Blamed It

ஆயிரக்கணக்கான மீன்களை சட்டவிரோத தொழிலாளர்கள் நேற்று(16) காலை கரைக்கு கொண்டுவர முடியாமல் நடுக்கடலில் கொட்டி விட்டு வந்ததை சக கடற்றொழிலாளர்கள் அவதானித்து தன்னிடம் முறைப்பாடு தெரிவித்ததாக தெரிவித்த அவர், விடயத்தை தெரியப்படுத்துவதற்காக பலமுறை கடற்படையினரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத தொழிலாளர்களால் வருமானமற்று வீதிக்கு வந்துள்ள வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் விரைவில் பட்டினியால் தவறான முடிவெடுக்க நேரிடும் என கடற்றொழிலாளர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை: தொடரும் குற்றச்சாட்டு | The Fishermen Have Blamed It

மேலும், சட்டவிரோத தொழிலாளர்களை கடற்படையினர்தான் ஊக்குவிக்கிறார்கள் என்ற கேள்வி அவர்களை கடற்படையினர் கைது செய்யாத போதே புலப்படுவதாகவும் கடற்றொழில் அமைச்சரால் இதுவரைக்கும் தமக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியவில்லையே என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்த சாவகச்சேரி போராட்டம்

தமிழர் தரப்பின் முக்கிய திட்டத்தை முறியடித்த சாவகச்சேரி போராட்டம்

ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் – மைத்திரி

ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் – மைத்திரி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US