அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய தமிழர்
மேற்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த மாநில நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜகதீஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தமிழ் பின்னணி கொண்டவர் என்பதோடு,அவுஸ்திரேலியாவின் Riverton தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.
மேலும் இவரை தவிர இந்திய பின்னணி கொண்ட மேலும் இருவர் இத்தேர்தலில் வென்று மேற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் நாடு நீலகிரி மாவட்டத்தில் பிறந்த அவர் மேற்படிப்புக்காக லண்டன் சென்று பின்னர் அங்கிருந்து 2006ம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
