பொது போக்குவரத்தில் பயணிக்கும் ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை - மீறினால சட்ட நடவடிக்கை
இலங்கையில் கொவிட் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொது போக்குவரத்து அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று முதல் தமது அலுவலக அடையாள அட்டையை போக்குவரத்தின் போது வைத்திருந்தல் வேண்டும் என ராஜாங்கக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனையிடப்படும். பொது போக்குவரத்து வாகனங்களில் அலுவலக அடையாள அட்டையுடன் பயணிக்கும் ஊழியர்கள் பொலிஸார் கேட்குமிடத்து அந்த அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறையை மீறுகின்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா வலியுறுத்தினார்.
திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்கள் தொடர்பில் சுகாதார துறை அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்தை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.




