ஹோட்டலில் பதுங்கியிருந்த சரத்பொன்சேகாவிற்கு அடைக்கலம் வழங்கிய ரணில்
கடந்த 2010ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒளிந்திருந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அவருக்கு அடைக்கலம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினுர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என அண்மையில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் சாமர சம்பத் தசாநாயக்க இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டார்.
2020 தேர்தல்
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று ஒரு மாத கால இடைவெளியில் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தினார் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பதவி உயர்த்தியவரை தூக்கிலிட வேண்டும் என சரத் பொன்சேகா கூறியதாகவும் எந்த கட்சியும் அவருக்கு அடைக்கலம் வழங்காத போது ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 2020 தேர்தலில் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற சரத் பொன்சேகா சஜித் பிரேமதாச உடனும் முரண்பட்டதாகவும் தலைமை பதவியை பெற்றுக் கொள்ள முயற்சித்ததாகவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உதவி செய்தவர்களை தூக்கிலிட வேண்டுமென சரத் பொன்சேகா கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உயர் பதவிகள்
மகிந்த ராஜபக்ச சிறை தண்டனை விதித்த காரணத்தினால் அவருக்கு எதிராக தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என கூறுவதில் நியாயம் உள்ளது என்றாலும் ஏனையவர்கள் அவ்வாறு எவ்விதமான பிரச்சினைகளிலும் தொடர்பு படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நெவில் வன்னியாரச்சியின் உதவியுடன் சரத் பொன்சேகா உயர் பதவிகளை அடைந்ததாகவும் சிறையில் இருக்கும் நெவிலிடம் இது பற்றி கேட்டால் முழு விவரங்களை வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெவில் ஆராய்ச்சியும் சரத் பொன்சேகாவின் பதவிக்காலத்தில் பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்டதாகவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




