உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி
சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள, சைகோவ் - டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு டி.சி.ஜி. எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோருக்காக சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கெடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
மூன்று டோஸ்களாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சைடஸ் கெடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.
அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில் அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ் - டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
உலகிலேயே கொரோனா வைரசிற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள முதல் மரபணு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam