தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்!விடுக்கப்பட்டடுள்ள அழைப்பு
சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளை தலைவர் அ.சத்தியானந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(24.4.2026) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக விளங்கும் தீபச்செல்வன் அவரின் நூலினை பாதுகாப்பு அமைச்சும் சுங்கத்திணைக்களமும் சேர்ந்து தடுத்து வைத்திருக்கின்றது.
சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கூட இவரின் ஆக்கங்கள் வாசிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு கூட செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு எழுத்தாளரின் நூலானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிங்கள எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆதரவு
கடந்த வாரம் கலாசார அலுவல்கள் அமைச்சில் விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் விடுவிப்பது தொடர்பாக ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே குறித்த நூலை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri