சி.ஐ.டியின் நடவடிக்கைக்கு ஐ.தே.க கண்டனம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதய சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிற்கு சென்று அவரது துணைவியார் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மைத்திரி விக்ரமசிங்கவைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் நோய் வாய்ப்பட்டு இருக்கும் இந்த தருணத்தில் வெளி நபர்கள் அவரது அவர்களது வீட்டுக்குச் செல்வது அவர்களது ஆரோக்கியத்திற்கு அபாயத்தை ஏற்படுத்த கூடும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கமிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam