ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதல் படம் வெளியானது
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை ஒமிக்ரோன் (Omicron) கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில்,ரோமிலுள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவ மனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கொரோனா ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதல் படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இந்த படம், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு பாதிப்பை விட ஒமிக்ரோன் மாறுபாட்டில் இரு மடங்கு பிறழ்வுகள் இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள் இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதம் இந்த ஒமிக்ரோனின்ஒரு பகுதியில் குவிந்துள்ளதுடன், இந்த மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என்று தற்போது சொல்லி விட முடியாது எனவும், இது குறைவான ஆபத்தை உடையதா அல்லது அதிகம் ஆபத்தானதா என்பதை இனிவரும் ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.
"பொட்ஸ்வானா, தென்னாபிரிக்கா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து கிடைக்கப்பெற்ற இந்தப் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு பற்றிய ஆய்விலிருந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan