எம்.ஐ.17வி-5 ஹெலிகொப்டர் விபத்தின் இறுதி தருணம்! - காணொளி வெளியானது
தமிழகம் குன்னூரில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் வனப்பகுதியின் மேல் பறந்து செல்லும் ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri