அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்! கோட்டாபய அரசை பலவீனப்படுத்த முடியாது - முக்கிய செய்திகளின் தொகுப்பு
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் இரகசிமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பத்தில் இருந்து பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,