28 வயது பெண் நடன கலைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட சடலம்
கொழும்புக்கு அருகில் உள்ள மகரகமை நகரில் உள்ள ஆடம்பர வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்த பெண் நடன கலைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அபகஸ்வெவ ஹிரியால, நரணகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணின் உடலை களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர் அங்கு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபரை அழைத்துச் சென்று வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீட்டில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது பெண் இறந்து விட்டதாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக நுகேகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நப் நிகவரெட்டிய மில்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதான திருமணமான மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.
இந்த நபர் உயிரிழந்த பெண்ணுடன் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இருந்து மறைமுக தொடர்புகளை வைத்திருந்ததுடன் மாதம் 30 ஆயிரம் வாடகைக்கு ஆடம்பர வீட்டை பெற்று பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.
அத்துடன் சில நாட்களுக்கு ஒரு முறை இந்த அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். உயிரிழந்த பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதுடன் 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஊரில் இருந்து வந்து கொழும்பில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கு பின்னர் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        