பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும்:செல்வம் அடைக்கலநாதன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய உறவைப் பேணிலாலும் வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஒதுக்கீடு
அவர் மேலும் கூறுகையில்,"பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பு ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிப்போம்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்
நேரத்தில், இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்"என கூறியுள்ளார்.