யாழில் 15 வயது சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த கதி
யாழ். தென்மராட்சி - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 18ஆம் திகதி பதிவாகியுள்ளது.
மகா சிவராத்திரி அன்று வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த 15 வயது சிறுமியொருவரை நபரொருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் வீட்டாரைக் கண்டதும் அவர் தப்பித்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதான இன்னுமொரு சிறுமியை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 வயது இளைஞர் ஒருவர் அழைத்து வந்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan