தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் ஆரம்பம்
தென்னிலங்கை நோக்கித் தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதியின் இரண்டு மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இக்கடுவை பிரதேச நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்யத் தம்பதி, நேற்றைய தினம் (27.02.2023) மாலை கொழும்பு - மருதானையிலிருந்து மாத்தறையை நோக்கி சென்ற தொடருந்தில் அளுத்கம வரை பயணித்துள்ளனர்.
இந்நிலையில், இடைவழியில் தொடருந்து பாணந்துறையை அண்மித்தபோது, அவர்களது மடிக்கணினிகளைச் சூட்சுமமான முறையில் திருடப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
குறித்த தம்பதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தொடருந்து புறப்பட்டபோது மடிக்கணினிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு இறங்கித் தப்பியோடியுள்ளார்.
இதன் காரணமாகத் தொடருந்து பாணந்துறை தெற்கு தொடருந்து நிலையத்தில் சற்று நேரம் மீண்டும் தரித்து நின்று புறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ரஷ்யத் தம்பதி பாணந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தபின்னர் தனியார் பேருந்து வண்டியொன்றில் இக்கடுவை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
