வெற்றிலை மென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வெற்றிலை மென்றபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது.
இன்று (18.01.2023) காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய நுழைவாயிலில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அவர் வாயில் வெற்றிலை மென்றபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாக செயற்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்
அதனடிப்படையில் வெற்றிலை மென்றபடி கடமையில் ஈடுபட்ட குறித்த தமிழ் பொலிஸ்
உத்தியோகத்தரை கடமையில் இருந்து அகற்றி உடனடியாக ஒழுங்காற்று நடவடிக்கை
எடுக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய நிர்வாக
அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.




