15 வயது சிறுவனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி: பெற்றோர்களே அவதானம்
புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பங்கதெனிய - கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 8 இல் கல்வி கற்கும் இந்த சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam