கொட்டாஞ்சேனை கொலையின் பின்னணியில் மோதர நிபுண
கொட்டாஞ்சேனை - கல்பொத்த சந்தியில் நேற்று(21.02.2025) இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பின்னணியில் பிரபல பாதாள குழுத்தலைவர் மோதர நிபுண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடாத்துவதற்கான ஒப்பந்தத்தை மோதர நிபுணவிடம் இருந்து தாம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பதில் துப்பாக்கிச் சூடு
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து, பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |