நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு வேலைத்திட்டம்!
நுவரெலியாவின் நுழைவாயிலான, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியினை கொட்டகலை கொமர்சர் பகுதியில் அமைந்துள்ள 642 படைபிரிவினர் இருமருங்கிலும் காணப்பட்ட குப்பைகளை அகற்றி பூக்கன்றுகளை நாட்டி அழகுபடுத்தும் வேலையினை முன்னெடுத்திருந்தனர்.
பொது மக்களால் வீதி ஓரங்களில் வீசப்பட்டு கிடந்த பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல், மதுபான போத்தல்கள்,உணவு பொதிகள்,உணவு பண்ட உரைகள்,கழிவுப்பொருட்கள் என அனைத்து வகை கழிவுகளும் அகற்றப்பட்டன.
கடந்த சில காலமாக ஹட்டன் தொடக்கம் கொட்டகலை வரையுள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களால் வீதியின் இரு மருங்கிலும் வீசப்பட்டு கிடைந்த குப்பைகளால் வீதியின் அழகு குன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.
அண்மைக்காலமாக நுவரெலியா உட்பட மலையக பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து காணப்படுவதனால்,வீதியில் வீசப்பட்டுள்ள குப்பைகூலங்களால் எமது நாடு பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த கூடாது எனும் நோக்கில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த வேலை திட்டதிற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் கொட்டகலை பிரதேச சபை உள்ளிட்டவை இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.









ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
