ஒட்டு மொத்த தமிழ் இனமும் அடக்குமுறைக்குள் தான் வாழ்ந்து வருகிறது: யோ.கனகரஞ்சினி
ஒட்டு மொத்த தமிழ் இனமும் அடக்குமுறைக்குள் தான் வாழ்ந்து வருகிறது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று( 22.05.2024) மேற்கொண்ட ஊடக சந்திப்பின் போது கூறியுள்ளார்.
சர்வதேச ரீதியிலான விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஜெனீவா சென்ற நேரம் எமக்கான தீர்வை தருவார்கள் என நம்பியிருக்கிறோம். இலங்கை அரசாங்கத்திற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தாலும் நாங்கள் சர்வதேச ரீதியிலான விசாரணையையே எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளரை சந்தித்து இது தொடர்பாக தெரிவித்திருந்தோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பார்வையிட்டதும் அவருக்கு புரிந்திருக்கிறது.இங்கு இனப்படுகொலை தான் நடந்தது என்று புரிந்திருக்கிறது.
எமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச நாடுகள் சேர்ந்து தீர்வை தர முன் வரவேண்டும். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கின்றோம். ஆனாலும் தீர்வு இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனும், ஜனாதிபதியுடனும் பேசுவதற்கு தயார் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
