மின் கட்டணம் அதிகரிக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியக் கடன் தவணை இல்லை!
இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடன் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான மின்கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பல தடவைகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டிருந்தது.
கடன் கொடுப்பனவு
கடந்த ஏப்ரலுக்குள்ளாக மின்கட்டண அதிகரிப்புக்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது. எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முன்னிட்டு மின்கட்டண அதிகரிப்பை அரசாங்கம் பிற்போட்டதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடனை விடுவிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக மின் கட்டண அதிகரிப்பிற்கான அறிவிப்பை வௌியிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில், அதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை விடுவிக்கப்படும் என்று மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடன் தொகையாக 344 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
