அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் மேற்கொள்கின்றது – பிரசன்ன ரணவீர
அரசாங்கம் அரசியல் ரீதியான பழிவாங்கல்களை மேற்கொள்வதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தி பிரசன்ன ரணவீரவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பில் நேற்றைய தினம் பிரசன்ன ரணவீர மஹர நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன் போது நீதிமன்றம் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தாம் எந்தவிதமான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் மூலம் உண்மை வெளிவரும் எனவும், தமது கைது ஒர் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றிலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது பிரசன்ன ரணவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
