நாடாளுமன்ற பாதுகாப்பு செயற்பாட்டில் இருந்த ட்ரோன் விபத்துக்குள்ளானது
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானது.
நேற்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளாா்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்கவென விமானப்படையினரால் ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்ற நேற்றைய தினம் பாதுகாப்புக் கண்காணிப்பு பணிகளில் பறக்கவிடப்பட்ட ட்ரோன் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
தியவன்னா ஆற்றில் விழுந்துள்ள குறித்த ட்ரோன் கருவியை கண்டுபிடிக்க கடற்படை சுழியோடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வேறு தரப்பின் ட்ரோன் கமெராக்கள் நாடாளுமன்றத்தின் மேலாக பறக்க விடுவதைத் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றையும் விமானப்படையினர் நிறுவியுள்ளனர்
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam