பேருந்தை ஓட்டிச் சென்ற போது சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம்
நிவிதிகல மாரப்பன பிரதேசத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற போது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி சாரதி உயிரிழந்துள்ளார்.
வீதி ஓரத்தில் இருந்த கடையில் பேருந்து மோதியதினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டதுடன் சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஷங்க கருணாரத்ன என்ற 30 வயதுடைய சாரதியே தனது சாரதி ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
திடீர் மரண விசாரணையில் சாட்சியமளித்த நடத்துனர் கிரிஷாந்த, இறந்தவரும் நானும் நிவிதிகல இரத்தினபுரி தனியார் பேருந்தில் பணிபுரிந்தோம். நான் அங்கு நடத்துனராகவும், இறந்த இஷாங்கா சாரதியாகவும் பணிபுரிந்தார்.
சம்பவத்தன்று இரவு எட்டு மணியளவில் இரத்தினபுரியில் இருந்து நிவித்திகல வரை எமது பேருந்தின் கடைசிப் பயணத்தை முன்னெடுத்தோம்.
பயணிகளை இறக்கி விட்டு பேருந்து உரிமையாளர் வீட்டிற்கு செல்வதற்காக மாரப்பனை நோக்கி பயணித்தோம். இதன் போது சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டு பக்கம் செல்வதனை அவதானித்தேன்.
எனினும் அவர் அவ்வாறு செல்ல விடமால் தடுத்து இடது பக்கம் திருப்பும் போது பேருந்து கடை ஒன்றின் மீது மோதியது.
எனினும் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என பின்னரே தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri