கோவிட் வைத்தியசாலைக்குள் நுழைந்து பெண்களை கடித்து குதறிய நாய்
மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மொரவக்க, கொஸ்நில்கொட பகுதியிலுள்ள வைத்தியசாலையிலுள்ள கொவிட் தொற்றாளர்களின் அறைக்குள் நாய் நுழைந்தவுடன் நோயாளர்கள் கட்டில் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது வெளிநாட்டில் இருந்த வந்த 18 பெண்கள் உட்பட 38 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வீடு நோக்கி செல்ல தயாராகி இருந்துள்ளனர். அவர்களை அழைத்து செல்ல வந்த உறவினர்கள் பலரும் வைத்தியசாலை பகுதியில் இருந்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு நாயை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் வீதிக்கு வந்த நாயை அங்கு கூடியிருந்தவர்கள் அடித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாய் பைத்தியம் பிடித்தது என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
