இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்துவதாக தி.மு.க தெரிவிப்பு
இந்தியாவின் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தனது கட்சி தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக திராவிட முன்னேற்றக்கழகம் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் எம்.கே ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், சட்டத்தை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்து ஒரு கோடி கையொப்பங்களை சேகரித்து தமிழகத்தில் ஒரு பிரசாரத்தை நடத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை விண்ணப்பங்களை மத்திய அரசாங்கம் விரைவுபடுத்தியது.
எனினும் ,இலங்கையின் முஸ்லிம்களையும், தமிழ் அகதிகளையும் ஏன் இந்தச் சட்டத்தின் எல்லைக்கு வெளியே இந்திய மத்திய அரசாங்கம் ஒதுக்கிவைத்தது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam