அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் அமெரிக்கா! இஸ்ரேல் எடுத்துள்ள முடிவு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் 19 புதிய இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை இன்று(2025.12.21) ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தனி பாலஸ்தீன நாடு உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இஸ்ரேலிய குடியிருப்புகளின்
இந்த புதிய திட்டத்தின் மூலம், 2005-ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட காதிம் மற்றும் கானிம் ஆகிய இரண்டு குடியிருப்புகளும் மீண்டும் உருவாக்கப்பட உள்ளன.
தற்போதைய தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 141-ஆக இருந்த குடியிருப்புகளின் எண்ணிக்கை தற்போது 210-ஆக உயர்ந்துள்ளதாக 'பீஸ் நவ்' என்ற கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஒக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வந்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுத்து வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை கவலை
சர்வதேச சட்டங்களின்படி இத்தகைய குடியிருப்புகள் சட்டவிரோதமானவை என்று கருதப்பட்டாலும், இஸ்ரேல் தனது கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து வருகிறது.

அதே சமயம், மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைத் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒலிவ் அறுவடையின் போது பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam