கோட்டாபய தலைமையிலான சர்வாதிகார அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! பொன்சேகா வலியுறுத்தல்
நாட்டு மக்களை ஏமாற்ற பல நாடகங்களை அரங்கேற்றும் ஊழல், மோசடி மிக்க இந்தச் சர்வாதிகார அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படும் எனக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி நிறைவேறுவதை மக்கள் விரும்புகின்றனர்.
எனவே, அந்த உறுதிமொழியில் இருந்து தலைவரால் பின்வாங்க முடியாது.
இவ்வாறு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்ற பிறகு நிச்சயம் ஊழலுக்கு முடிவுகட்டுவேன். இராணுவத்தில் நான் இருந்தபோது அதனைச் செய்தேன். இராணுவத்தில் 4 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட ஒரு இராணுவ அதிகாரியை வீட்டுக்கே அனுப்பினேன். எனவே, மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம்வரை நிச்சயம் கைவைப்பேன்.
முதலில் மேல் மட்டத்தில்தான் கைவைக்க வேண்டும். அப்போது கீழ்மட்டம் தானாகவே
திருந்திவிடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri